-ஞானத்தமிழ்-
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இங்கு நடாத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், மின்னினைப்பாளர் விருந்தினர் வரவேற்பாளர், வெதுப்பாளர், சமையலாளர், அலுமினியம் பொருத்துனர், அறைபராமரிப்பாளர், உணவு மற்றும் குளிர்பானம் பரிமாறுபவர், பெண்கள் சிறுவர்களுக்கான ஆடைவடிவமைப்பாளர், மரவேலை தொழிநுட்பவியலாளர், வளிசீராக்கி, குளிர்சாதன திருத்துனர் போன்ற கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாக காரைநகர் வலந்தலைச் சந்தியில் உள்ள தொழிற்பயிற்சி நிலைத்திற்கு வருகை தந்து அல்லது பயில விரும்பும் கற்கைநெறி, முழுப் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பனவற்றை 076 668 8404 என்ற வட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















