யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும், உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது விளையாட்டுக் கழகத்திற்கான சீருடைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது செம்மணிப் பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், குறித்த விபத்து இடம்பெற்ற வேளை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வயல் வெளிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.

















