-சி.ஜெகதீஸ்வரன்-
மோட்டார் சைக்கிள் நாயுடன் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அராலி தெற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இராசதுரை நிசாந்தன் (வயது-38) என்ற இளம் குடும்பஸ்தராவார். யாழ்ப்பாணம், கல்லுண்டாய் வீதியில் இளைஞர் சேவை மன்ற அலுவலகத்திற்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றிருந்தது.
மனைவி கனடாவில் உள்ள நிலையில் யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமை புரிந்து வந்த அவர் கடந்த ஆறாம் திகதி அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நாயுடன் மோதி விபத்திற்குள்ளானார்.
அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம்மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















