வில்பத்து காடழிப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளவும் குடியமர்த்துவதற்கு, வில்பத்து காடுகளை அழித்து வீடுகளைக் கட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீனுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த செனவிரத்தன ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் தள்ளுபடி செய்துள்ளது.
சட்ட அடிப்படைகள் இல்லாமல் ஊடகங்களில் பிரபல்யம் தேடும் நோக்கிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக ரிஷாட்பதியுதீன் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மன்றில் தெரிவித்ததுடன் மனுதாரர்கள் தொடர்ந்து இவ்வழக்கை முன்னெடுக்கத் தவறியுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு வாதிட்டார்.
இவற்றைக் கருத்திற்கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கை நேற்றுமுன்தினம் தள்ளுபடி செய்தது.


















