நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் இன்றையதினம் இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவ்வாறு ஆடைகளை அணிந்து வருவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அடையாளப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் அணிய வேண்டிய சின்னத்தை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தயாரித்துள்ளதாகவும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அச்சின்னம் வழங்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.


















