-ஞானத்தமிழ்-
யாழ்ப்பாணக் கல்வி வலயத்தினால் க.பொ.த சாதாரண தரத்தில் விவசாய பாடம் கற்கும் மாணர்களுக்கான செயலமர்வு நடாத்தப்படவுள்ளது.
இச் செயலமர்வில் கோப்பாய்க் கோட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு இன்றும், நாளையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணி வரை யா.ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்திலும், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கோட்டங்களின் பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 24 ஆம், 25 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணி வரை நல்லூர் ஸ்ரேசன் சீ.சீ.தமிழ் கலவன் பாடசாலையிலும் நடைபெறவுள்ளது.
இச் செயலமர்வுகளில் மாணவர்கள் பொறுப்பாசிரியர்களுடன் பங்குபற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















