இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் 1,800 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்ரெம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடந்த ஆயிரத்து 757 வீதி விபத்துக்களில் ஆயிரத்து 870 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதி பொலிஸ் தலைவர் இந்திக்க ஹபுகொட தெரிவித்தார்.
வீதி விபத்துகளால் நாளாந்தம் சுமார் 7 முதல் 8 பேர் வரை உயிரிழப்புக்கள் ஏற்படுவதால் சாரதிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வீதிப் பயனர்களும் போக்குவரத்துச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என பிரதி பொலிஸ் தலைவர் இந்திக்க ஹபுகொட தெரிவித்தார்.


















