-கஜிந்தன்-
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், கைதான யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியைச் சேர்ந்த நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் முடிந்த பின்னர், அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

















