-சொ.வர்ணன்-
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபர் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் மேற்படி நபர் பலரை ஏமாற்றி பணம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.நகரில் உள்ள பிரபலமான விடுதிகளில் தங்கியிருந்து, இளைஞர்களை அங்கு வரவழைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நபர் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் இணையவழி முறைப்பாட்டு பிரிவிற்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.


















