அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காரில் இருந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை ஆகிய மூவரும் அனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினர் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி பொலிஸாரால் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.















