வடகீழ் பருவமழை வெள்ள முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்தக் கலந்துரையாடலில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சவால்களை திறம்பட நிர்வகிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரச அதிபர் காணி அஜிதா பிரதீபன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K அழகக்கோன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட பிரதம கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார் மாவட்டதிலுள்ள அனைத்து திணைக்களங்களின் தலைவர்கள்இ தொண்டு நிறுவனம் சார்ந்தோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

















