பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, வராஹேன பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகனின் தந்தை ஒருவர் தனது வயலில் வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்ற போது தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக ஹிங்குரக்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹிங்குரக்கொட, போகஸ் சந்தியில் வசித்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இவர் வைக்கோலுக்குத் தீ வைப்பதற்காக தனது வயலுக்கு நேற்று சென்றுள்ளார். பின்னர் இவர் வைக்கோலுக்குத் தீ வைத்த போது அப்பகுதியில் தீ பரவல் ஏற்பட்டு அந்த இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிங்குரக்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

















