ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அவர்களிடமிருந்து 5 கிலோ கிராம் 416 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஊடாக சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 10,811,500 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் 32 முதல் 51 வயதுக்குட்பட்ட காலி, ஹங்கம, தெல்வத்த, வத்துகெதர மற்றும் சீனிகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மேற்கொண்டு வருகிறது.















