நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெருந்தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, குறித்த சுற்றிவளைப்பில் 1,482.82 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய 59,243 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 14,434.468 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய 59,482 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 32.642 கிலோகிராம் கொக்கோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய 86 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
582.136 கிலோகிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய, 1,444 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2,542.454 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய, 67,762 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் , 3,961,790 போதைமாத்திரைகள் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய, 2,921 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


















