15 வயது மாணவி ஒருவரை காணவில்லையென வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சிகா என்ற மாணவியை கடந்த திங்கட்கிழமை வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் வீடு திரும்பவில்லை என மாணவியின் தாயினால் முறையிடப்பட்டுள்ளது.
இவர் தொடர்பாக தகவல் தெரிந்தோர் 0778060470 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது வவுனியா பொலிஸாருக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















