கொட்டகலை பகுதியில் குடிநீர் பெற்றுக்கொள்ளும் பல பகுதிகளுக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதால் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த தீ திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் குடாஓயா மற்றும் குடாகமவில் உள்ள மானா காட்டுப்பகுதிக்கே இவ்வாறு நேற்றுமுன்தினம் காலை தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு கொட்டகலை கொமர்சல் இராணுவ முகாமின் இராணுவ வீரர்கள் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் கடும் காற்று காரணமாக தீயை கட்டுப்படுவத்துவதில் சிரமப்பட்டனர்.
இந்த தீ வைக்கப்பட்ட பகுதியிலிருந்து அமைதிப்புரம், சமாதானப்புரம், நேத்ரா பிளேஸ்,உள்ளிட்ட பல பகுதிகளில் வாழும் பொதுமக்கள் குடிநீரினை பெற்றுக்கொள்ளுகின்றனர்.
இதனால் எதிர்காலத்தில் குறித்த பகுதியில் உள்ள நீரூற்றுக்கள் அற்றுப் போவதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புக்காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


















