வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் தனியார் நிறுவனமான டனுசா மரைன் நிறுவனம் மூன்று மில்லியன் பெறுமதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் இயந்திரப் படகுச் சவாரி மற்றும் சிறிய துடுப்பு வலித்து செல்லும் படகுகள் சுற்றுலாவிற்காக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் இப்படியே ஆசாரிகள் இடம் பெறவுள்ளதாக அதனை ஏற்பாடு செய்த பருத்தித்துறை நகரபிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் மற்றும் டனுசா மரைன் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் சுமித்தி பெர்ணாண்டோ ஆகியோர் தெரிவித்தனர்.
பரீட்சாத்த படகுச் சவாரி ஆரம்ப நிகழ்வுகள் பருத்தித்துறை நகரபிதாவும், பிரபல தொழிலதிபருமான வின்சன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்றது.


















