வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்கள் 32 வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் 19 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
குருநகர்ப் பகுதியில் 1983ஆம் ஆண்டு காலப் பகுதியில் வீடமைப்பு அமைச்சினால் வீடற்ற மக்களுக்கு எனக் கட்டிக் கையளிக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்களே வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹவால் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் , பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு அமைச்சரால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


















