2027 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் தர மாணவர்களுக்காக புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஊவா வெல்லஸ்ஸ இரு திசைகளின் பிரதான சங்கநாயக்கரும், யுடகனாவ ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டித கல்டெம்வத்தே நந்தரத்தன நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்:-
புதிய பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகளை கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாகாண பாடசாலைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிதியை முறையாகப் பயன்படுத்தி பாடசாலைகளை அபிவிருத்தி செய்யுமாறும், பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான கோரிக்கைகளை முன்வைக்குமாறும் பிரதமர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.


















