தலவத்துகொட பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிடம் இருந்து 2 கிலோ 946 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிலோ 290 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் 32 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


















