மஹரகம, அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் புகைப்படங்களை மோசடியாக பேஸ்புக்கில் வெளியிட்டு மில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்ததற்காக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளும், இக்கைதின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கடவத்தை, ஜா – எல மற்றும் கிரிபத்கொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோரின் புகார்களைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில், சந்தேக நபர்கள், குழந்தைகளின் பெற்றோர், பல்வேறு மதத் தலங்களுக்கு அனுப்பிய குழந்தைகளின் புகைப்படங்களைப் பெற்று, நிதி உதவி கோரி கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.


















