இலங்கைப் புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் புதிய தலைவராக சுமேத சோமரத்ன, சங்கத்தின் பிரதான செயலாளராக கசுன் சாமர ஜயசேகர, பொருளாளராக சதீஷ் குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைப் புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் மகாசபை கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாளிகாவத்தை செரன்டிப் ஹோட்டலில் நடைபெற்றது.
இம்முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கை புகையிரத அதிபர் சங்கத்தின் தலைவராக சுமேத சோமரத்ன தெரிவு செய்யப்பட்டதுடன், சங்கத்தின் பிரதான செயலாளராக கசுன் சாமர ஜயசேகர, பொருளாளராக சதீஷ்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


















