உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நவம்பர் 6 இல் சவூதி அரேபியாவுக்கு செல்ல உள்ளார். ரியாத் நகரில் நடைபெறவுள்ள நான்காவது அழகியல் மற்றும் மருத்துவ அறிவியல் அகாடமி மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகவே இந்த விஜயம் முன்னெடுக்கப்படுகின்றது.
அமைச்சர் விஜித ஹேரத், இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதுடன், சவூதி அரேபிய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களையும், அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்புகள் மூலம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது, அத்துடன் சவூதி அரேபியாவில் பணிபுரியும் 5 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது குறித்தும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்.


















