-பா.பிரதீபன்-
யாழ். நகரில் போதை மாத்திரைகளுடன் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நகரப் பகுதியில் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 20 போதை மாத்திரைகளுடன் 17,18 வயதுகளையுடைய 3 இளைஞர்கள் யாழ். நகரப்பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















