கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் பிறந்து 25 நாளேயான ஆண் சிசு ஒன்று மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிசு யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த ஆதித்தன் கிருசாலினி என்ற 25 நாள் சிசுவாகும்.
குறித்த சிசு கடந்த மாதம் 27 ஆம் திகதி யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பிறந்த நிலையில், அச் சிசுவிற்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த முதலாம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தது.
அங்கு சிசுவிற்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டுவந்திருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அந்தச் சிசு உயிரிழந்துள்ளது.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.


















