இலங்கையின் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 52 லட்சமாக இருக்கையில் அதில் 43 இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை பெற்றுக்காள்ள விண்ணப்பம் செய்துள்ளதாக அமைச்சர் உபாலி பன்னல தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2024ம் ஆண்டில் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நாட்டில் 52 இலட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 43 இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்காக விண்ணப்பம் செய்துள்ளன. இதனை பார்க்கின்ற போது இலங்கையில் பெரும்பாலனவர்கள் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் வாழ்ந்து வருவதாக காணமுடிகின்றது.
இந்த நிலைமையானது நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமன்றி மக்களின் உளச் சுகாதாரத்தையும் பாதிக்கும். அரசியலில் நிலவி வந்த ஓர் கலாச்சாரமும் இவ்வாறு மக்கள் உதவி பெறும் நிலைக்கு தள்ளப்படுவதற்கான ஏதுவாகும்.
மக்கள் மற்றும் அரசியல்வாதிகளினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிலைமைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அது இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதில் பெரும் நெருக்கடிகள் உருவாக்கக்கூடும் – என்றார்.


















