‘லங்கா கவர்மன்ட் கிளவுட்’ சேவையில் காணப்பட்ட சிக்கல்கள் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த தொழிநுட்ப கோளாறு காரணமாக, பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் பிறப்பு மற்றும் இறப்பு, திருமணச் சான்றிதழ் கட்டமைப்பு, மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள (மேல் மாகாணம் தவிர்ந்த) இணையவழி வருமான வரி செலுத்தல் கட்டமைப்பு, பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் கட்டமைப்பு, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதியத் தகவல் கட்டமைப்பு, நிறுவனப் பதிவாளர் திணைக்களம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் உள்ளிட்ட 34 அரச நிறுவனங்களின் இணையத்தள சேவைகள் சுமார் ஒரு வார காலமாக செயலிழந்திருந்தன.
அதற்கமைய குறித்த சிக்கல் நிலை காரணமாக முடங்கியிருந்த அனைத்து அரச இணைய சேவைகளும் நேற்று முன்தினம் முதல் படிப்படியாக வழமைக்கு திரும்பிய நிலையில் நேற்று காலை முதல் முழுமையாக திரும்பியுள்ளதாக ICTA குறிப்பிட்டுள்ளது.


















