பொதுச் சுகாதார சேவைகளை நன்கொடைகள் மூலம் வலுப்படுத்துவதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அளித்த ஆதரவிற்கு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நன்றி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் சிறுநீரக நோயாளிகளின் சிகிச்சைக்காக கெபத்திகொல்லாவ வைத்தியசாலைக்கு Dialysis machine and RO plant உட்பட 39 மருத்துவ சாதனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தன.
இத்தகைய பங்களிப்புகள் நோயாளிகளுக்கு நேரடியாக பயனளிக்குமெனவும் இவ்வாறான பங்களிப்புக்களை அனைவரும் வழங்கவேண்டுமெனவும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தினர்.

















