பாஹ்ரெய்னில் நடைபெற்றுவரும் 3 ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் கபடி போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
முதல் இரண்டு நாட்களில் ஆண்கள் அணியினர் மாத்திரம் ஒரு வெற்றியை பெற்ற நிலையில் நேற்றைய தினம் இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு அணியினரும் வெற்றிபெற்றனர்.
ஆண்களுக்கான ஏ குழு போட்டி ஒன்றில் தாய்லாந்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை கடைசி நேரத்தில் 50 – 49 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதேவேளை, பெண்களுக்கான ஏ குழு கபடி போட்டியில் பங்களாதேஷை 47 – 40 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிகொண்டது.

முதலாவது ஆட்ட நேர பகுதியில் 25 – 18 என இலங்கை வெற்றிபெற்றபோதிலும் இரண்டாவது ஆட்ட நேர பகுதி 22 – 22 என சமநிலையில் முடிவடைந்தது. இதற்கு அமைய இலங்கை 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


















