அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர நாளான இன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவரது இறுதிச் சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,அறிவித்துள்ளதாக மவுண்ட் ரஷ்மோர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொமெய்னி கொல்லப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வெடித்த போர், சர்வதேச நாடுகளின் முயற்சியால் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
கொமெய்னியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல இலட்சக்கணக்கான ஈரானிய மக்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தெஹ்ரானில் குவிந்துள்ளனர்.
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட ட்ரம்ப் “நாங்கள் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளோம், அவர்கள் நிலைபெற விரும்புகிறார்கள் அதனால் இந்த ஒரு வார விடுமுறையை வழங்கியுள்ளோம்” என கூறியுள்ளார்.
அவரது உடல் ஈரானின் மஷாத் நகரில் அடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















