சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி, காளி கோயில் வீதியைச் சேர்ந்த 57வயதான மயில்வாகனம் என்பவர், இன்று மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள, ஆள் நடமாட்டம் குறைவான வளவு ஒன்றிலேயே அவர் டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதும் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















