சீரற்ற வானிலையால் நுவரெலியா – ஹட்டன் ஏ – 7 பிரதான வீதியில் நானுஓயா – டெஸ்போட் பகுதியில் இன்று காலை மரம் ஒன்றின் கிளை முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் அவ்வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மரக்கிளையை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, போக்குவரத்து தடையை சீர் செய்ய பணிகள் நடைபெற்று வருவதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

















