சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி
2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கை ஒப்புதல் கடந்த ஜூலை 7இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.
இதன்படி சட்ட வரைவாளர் தயாரித்த வரைவு மசோதாவிற்கு சட்டமா அதிபரின் அனுமதி பெறப்பட்டது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.
இந்த வரைவு மசோதாவை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன் பின்னர் அந்த வரைவு மசோதாவை பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


















