பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் மக்கள் சந்திப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வவுனியா – மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க கப்பு கொட்டுவ தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம்,மாதத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் பிரதி பொலிஸ் மா அதிபரை வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் மக்கள் சந்திக்க முடியும்.


















