பல்லேகலே திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு- 5 பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கைதி ஒருவரும், கொழும- 15 பகுதியைச் சேர்ந்த கைதி ஒருவருமே தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு கைதிகளும் சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற கைதிகளை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


















