-பா.சதீஸ்-
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் நேற்று பொலிஸ் ஜீப் வாகனமொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த அனர்த்தத்தில் வாகனத்தில் பயணித்த பொலிஸார் சிலர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஜீப் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீதியில் பயணித்த ஜீப் வாகனத்தின் முன் திடீரென மாடுகள் குறுக்கே வந்தமையால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி தடம்புரண்டதாகவும்; சேதமடைந்த வாகனம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சமீபகாலமாக வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகள் அலைந்து திரிவதன் காரணமாக விபத்துகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















