பூமியில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலைவில் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் (தியான்காங்) செயல்படுகிறது. இதுகுறித்து சீன விண்வெளித் துறை செய்தித் தொடர்பாளர் ஜாங் ஜிங்போ கூறியதாவது:-
சீன விண்வெளி வீரர்கள் ஜாங் லு, வூ பெய், ஜாங் ஹாங் ஜாங் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை பூமியில் இருந்து தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சீனாவின் நிலவுப் பயண திட்டம் 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் நிலவுக்கு ரோபோவை அனுப்பினோம். 2020 ஆம் ஆண்டில் நிலவில் இருந்து 1.7 கிலோ பாறை, மண்ணை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தோம். அடுத்த கட்டமாக வரும் 2030 ஆம் ஆண்டில் நிலவில் சீன வீரர்கள் கால் பதிப்பார்கள் என்றார்.


















