நாட்டின் சுற்றுலா சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தையும் இலக்கையும் கொண்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்த அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பது அவசியம்.இதற்காக ஒரு தேசிய சுற்றுலா ஆணையம் நிறுவப்படும்.
இந்த ஆணையம் மூலம் மாவட்ட அளவிலும் சுற்றுலா மண்டல அளவிலும் கூட்டு சுற்றுலா குழுக்களை நிறுவுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதை இலக்காகக் கொண்டு ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த நோக்கத்திற்காக தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாததால் சுற்றுலா சட்டம் திருத்தப்பட்டு வருகிறது. மேலும் நிபுணர்கள் குழுவிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட உள்ளது என்றார்.


















