-ஞானத்தமிழ்-
இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழக யாழ். பிராந்திய நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள நீரியல் வளர்ப்பு தொழில்நுட்பவியலாளர் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இக்கற்கைநெறி 6 மாத காலத்தைக் கொண்டதாகும், முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக கற்க விரும்புவோர் விரைவாக தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கற்கை நெறிக்கான விண்ணப்பங்களை ‘www.ocu.ac.lk’ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடிவதுடன், மேலதிக விபரங்களை 021 2226251 , 0776182056 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















