-ஞானத்தமிழ்-
வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான விஞ்ஞான பாட. முதலாவது மாதிரிப் பரீட்சை நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இவ்விஞ்ஞான பாட பரீட்சை காலை 8 மணிக்கு பகுதி 2 முற்பகல் 11.45 மணிக்கு பகுதி 1 என நடைபெறவுள்ளது.
க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பரீட்சை அடைவு மட்டத்தை அதிகரிக்கும் முகமாக மேலும் 3 மாதிரிப் பரீட்சைகள் விஞ்ஞான பாடத்திற்கு நடாத்தப்படவுள்ளது.


















