தெரேசியாவத்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அவரிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


















