தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார, போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறி சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக மீரிகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நேற்று மீரிகம பொலிஸில் முறைப்பாடு அளித்தார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பானவர்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். பல கணக்குகள் போலியானவை. நான் ஐஸ் மற்றும் ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடையவன் என்று கூறும் அறிக்கைகள் தவறானவை. இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் உரிய முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குமார எம்.பி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்திருந்தார்.


















