-ஞானத்தமிழ்-
இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கைதடி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இங்கு நடத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்ட்பவியலாளர், முச்சக்கரவண்டி இயந்திரவியல் தொழில்நுட்பவியலாளர், மோட்டார் சைக்கிள் இயந்திரவியல் தொழில்நுட்பவியலாளர், தன்னியக்க மோட்டார் வாகன இயந்திர தொழில்நுட்பவியலாளர், தொழில்சாலை மின்னினைப்பாளர், காய்ச்சி இணைப்பாளர், கட்டிடநிர்மான உதவியாளர் மற்றும் ஆடைவடிவமைப்பாளர் ஆகிய 4 மாதங்களைக் கொண்ட கற்கைநெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாக கண்டி வீதி, கைதடியில் உள்ள கைதடி தொழிற்பயிற்சி நிலைத்திற்கு வருகை தந்து அல்லது பயில விரும்பும் கற்கைநெறி, முழுப் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பனவற்றை 0772718972 என்ற வட்சப் இலக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.















