-இ.கலைஅமுதன்-
யாழ். பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் காண்பிய மற்றும் ஆற்றுகை கலைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் கடந்த வார இறுதியில் இரு தினங்கள் நடைபெற்றன.
‘தமிழர் கலைகள் மரபும் மாற்றமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாடு இந்தோ –இலங்கை அறக்கட்டளையின் ஆதரவுடன் நடைபெற்றது.

இதில் மாணவர்களால் ஆய்வுகளும் சமர்பிக்கப்பட்டதுடன் சென்னை கலாச்சேத்ரா நிறுவகத்தின் சார்பில் அறிஞர் முனைவர் எஸ்.ரகுராமன் முக்கிய உரை மற்றும், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, சேர் பொன் இராமநாதன் காண்பிய மற்றும் ஆற்றுகை கலைகள் பீட பீடாதிபதி த.றொபேட் அருட்சேகரன், யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், கலைத்துறை சார்ந்தோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.















