வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸர் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடு ஒன்று தொடர்பாக பொதுமகன் ஒருவரிடம் இலஞ்சம் பெற முயன்றபோது இலஞ்ச – ஊழல் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் இலஞ்ச – ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நேடுங்கேணி பகுதிக்கு வருகைதந்த இலஞ்சம் மற்றும் ஊழல் – ஊழல் தடுப்பு பிரிவினர், குறித்த பொலிஸ் சார்ஜன் இலஞ்ச பணத்தின் ஒரு பகுதியை வாங்கும்போது கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபர் நேற்று வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


















