இலங்கை – இந்திய மின் கட்டமைப்பு உயர் மின்னழுத்த பாதையின் மூலம் இணைக்கப்படும் என மின் சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று தனது அமைச்சுத்துறைக்கான செலவினத் தலைப்பு மீதான விவாதத்தை முடித்து வைத்து, கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், இரு நாடுகளும் அதில் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறிய அமைச்சர் இலங்கையைப் பொறுத்தவரை, சிறந்த விகிதத்தில் மின்சாரம் பரிமாறப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்றார்.


















