-சி.ஜெகதீஸ்வரன்-
பருத்தித்துறை வீதி ஆனைப்பந்தியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த கனகசுந்தரம் நந்தினி (வயது-62) என்பவராவார்.
இவரை இரண்டு நாளாக காணாத நிலையில் தேடிய போதே வீட்டில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு நேற்று வியாழக்கிழமை சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















