மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 ஆம் மைல் பகுதியில் பெண்ணொருவர் வியனா கால்வாயில் தவறி விழ்ந்து நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (20) இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வியானா கால்வாய் கரையில் ஆணொருவரும் பெண்ணொருவரும் நடந்து சென்றுள்ளனர். இதன்போது, இதன்போது கால்வாயில் இருவரும் விழுந்துள்ளனர்.
இதனை கண்ட கால்வாயில் நீராடிக்கொண்டிருந்த நபரொருவர் நீரோட்டத்தினால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆணை காப்பாற்றியுள்ளார். ஆனால், பெண் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன பெண் அம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.
காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிக்க மஹியங்கனை பொலிஸார், பிரதேசவாசிகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.


















