-மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது-
2019 ஆம் ஆண்டில் 151.341 கிலோகிராம் ஹெரோயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.
நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதி பி.குமாரரத்னம் உடன்பட்டு, செப்டம்பர் 27, 2023 அன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.
குற்றப்பத்திரிகையில் உள்ள மூன்று குற்றச்சாட்டுகளிலும் ஐந்து குற்றவாளிகளையும் உயர் நீதிமன்றம் குற்றவாளிகள் எனக் கண்டறிந்து, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் மரண தண்டனை விதித்தது.
நீர்கொழும்பு, கட்டுவா பகுதியைச் சேர்ந்த சமிந்த ரோஹன பெர்னாண்டோ, அன்டன் கிறிஸ்த பெர்னாண்டோ, துலாக் ரவீந்திர பெரேரா, லியனதுரகே சுரேன்ஜ் மற்றும் தரிந்து ஜெயந்த பெர்னாண்டோ ஆகிய குற்றவாளிகள் மீது 152.341 கிலோகிராம் ஹெராயினை சதி செய்தல், கடத்தல், வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்கள் நவம்பர் 2, 2019 அன்று தெற்கு ஆழ்கடலில் ‘புத்திமா’ என்ற பல நாள் மீன்பிடி இழுவைப்படகை இயக்கி, மீனவர்களாக போதைப்பொருட்களை கொண்டு சென்றதாகக் கூறி கைது செய்யப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்ட்டிருந்த நிலையில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே 5 பேருக்கு மரண தண்டனை தீர்பை வழங்கியிருந்தார்.
குறித்த வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டோர் மேல்முறையீடு செய்ய்பட்ட நிலையில் குறித்த வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இது குறித்த வழக்கு நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்த மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உயர்நிதிமன்றத்தின் கண்டுபிடிப்புகள் அல்லது விதிக்கப்பட்ட தண்டனையில் தலையிட எந்த அடிப்படையும் இல்லை என்று ஐந்து நபர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.


















