முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, பணச்சலவை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரகெட்டிய பகுதியில் கலால் வரி உரிமம் வழங்குவதாகக் கூறி ஒருவரிடம் இருந்து ரூ. 2,750,000/ மோசடி செய்யப்பட்டது தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில், அதன் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.
அதன்படி, சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பாக ஜெயலத் பண்டார திசாநாயக்கவை நேற்று (14) காலை ஹங்குரங்கெத்த பகுதியில் கைது செய்தனர்.
58 வயதான சந்தேக நபர், இன்று (15) நுவகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மேலும், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


















